Toronto கிழக்கு பகுதியில் உள்ள கழிவறை ஒன்றில், 11 வயது சிறுமியை இரகசியமாக புகைப்படம் எடுத்த 36 வயது நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 25 அன்று Queen Street East மற்றும் Lee Avenue அருகில் உள்ள Kew Gardens Park கழிவறைக்குள் சிறுமி சென்றபோது, அங்கு மறைந்திருந்த நபர் சிறுமியை புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் உதவியை அடுத்து தப்பிச் சென்ற சந்தேக நபரான Torontoவைச் சேர்ந்த Hans Martins-Gonzalez என்பவரை பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
அவர் மீது தனிமனித சுதந்திரத்தை மீறி இரகசியமாக பதிவு செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மேலும் சிலர் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.










