கனடியக் குடும்பங்களுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமான மின்சார வாகனம்!

கனடியக் குடும்பங்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய Kia EV5 மின்சார எஸ்.யு.வி (SUV) வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐந்து பயணிகள் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், குடும்பங்களின் பயணங்களை மிகவும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றுகிறது.

இதில் 30 அங்குல டிஜிட்டல் திரை வசதி மற்றும் வாகனத்திற்கு வெளியிலிருந்தே ரிமோட் மூலம் பார்க் செய்யும் Remote Smart Park Assist 2 தொழில்நுட்பம் உள்ளது.

மேலும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (Apple CarPlay) வசதிகள் பயணத்தை மகிழ்ச்சிகரமாக்குகின்றன.

Vehicle-to-Load வசதி மூலம் உங்கள் பயணத்தின் போது கையடக்கத் தொலைபேசி மற்றும் டேப்லெட்டுகளை மின்னேற்றம் செய்துகொள்ள முடியும்.

விரல் ரேகை மூலம் வாகனத்தைத் இயக்கும் வசதி (Fingerprint recognition) பயணிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

கனடிய வானிலைக்கு ஏற்றவாறு, நகர்ப்புறப் பயணங்களுக்கு முன்பக்க சக்கர இயக்கம் (Front-wheel drive) மற்றும் அனைத்து வானிலைக்கும் ஏற்றவாறு (All-wheel drive) ஆகிய தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

பனோரமிக் சன்ரூப் (Panoramic sunroof) மற்றும் ஹர்மன் கார்டன் (Harman Kardon) ஒலி அமைப்பு பயணத்தை இன்னும் சிறப்பாக்குகின்றன.

இவை அனைத்தையும் உள்ளடக்கிய இந்த புதிய Kia EV5, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் அதே சமயம் குடும்பத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த வாகனமாகப் பார்க்கப்படுகிறது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles