கனடாவில் படிப்பை முடித்தால் வேலை செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த சர்வதேச மாணவர்கள் படிப்பு முடிந்ததும் Work Permit மறுக்கப்பட்டதால் தற்போது சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
Alberta-வில் தற்போது நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் பிரச்சினை இதுதான்.
சில career மற்றும் vocational programs-ஐ முடித்த மாணவர்களின் Post-Graduation Work Permit — PGWP விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான முக்கிய காரணமாக, அவர்கள் முடித்த கல்வித் திட்டங்கள் ‘non-credit programs’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து Calgary மற்றும் Edmonton பகுதிகளில் மாணவர்கள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
2024-ஆம் ஆண்டு இந்த programs-இல் சேர்ந்தபோது, கல்வியை முடித்த பின்னர் PGWP பெறுவதற்கான தகுதி இருக்கும் என்று தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் IRCC இதை மறுக்கிறது. PGWP விதிகளில் புதிதாக மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றும், degree, diploma அல்லது certificate வழங்கும் தகுதியான கல்வித் திட்டமாக இருக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே இருந்ததாகவும் IRCC தெரிவித்துள்ளது.
ஆனால் மாணவர்கள், தாங்கள் கல்வியில் சேர்ந்தபோது “non-credit programs PGWP-க்கு தகுதியற்றவை” என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை என வாதிடுகின்றனர்.
இதனால் கல்விக்காக ஆயிரக்கணக்கான டொலர்களை செலவழித்த மாணவர்களின் வேலை மற்றும் கனடாவில் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் திட்டங்கள் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன.










