கனடா, ஒன்ராறியோ மாகாணத்தின் LaSalle பகுதியில் Nancy Grewal (45) என்ற சீக்கிய பெண்மணி மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த இவருக்கு, சுமார் 40 கொலை மிரட்டல்கள் வந்ததாக கூறியுள்ளார்.
கடந்த நவம்பரில் அவரது Windsor இல்லத்தின் மீது தீ வைப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று ஒரு வீட்டில் பணியாற்றிவிட்டு வெளியே வந்தபோது அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாகக் கருதும் LaSalle பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, தனது சகோதரியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என இந்தியாவில் இருக்கும் அவரது சகோதரி Alishaa உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
