கனடாவில் இந்தியரான லொறி சாரதியின் சடலம் மீட்பு – கொலை என பொலிஸார் உறுதி!

ஸ்டோனி கிரீக் பகுதியில் புதன்கிழமை காலை கண்டெடுக்கப்பட்ட ஆடவரின் சடலம், Brampton-ஐச் சேர்ந்த ஒருவருடையது என்பதும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலியானவர் 29 வயதுடைய Taranpreet Singh Sidhu என Hamilton பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Fruitland Road மற்றும் Harbour Drive பகுதிக்கு அருகிலுள்ள ஒரு மதகில், ஆழமற்ற நீரில் பாறை ஒன்றின் மீது சடலமாக இவர் கண்டெடுக்கப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த இவர், Brampton மற்றும் Halifax ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளதோடு, லொறி சாரதியாக (Truck driver) பணியாற்றியுள்ளார்.

அவரது உடற்கூறாய்வு முடிவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

எனினும், அவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கொல்லப்படவில்லை என்றும், வேறு எங்கோ கொல்லப்பட்டு இங்கு கொண்டுவந்து வீசப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை அதிகாரி Robert Dillani தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles