கனடாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அலுவலக வருகை விதிமுறை இன்று (ஜூலை 6) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, முக்கிய பொதுத்துறை ஊழியர்கள் (Non-executives) அனைவரும் வாரத்திற்கு குறைந்தது 4 நாட்கள் அலுவலகத்திற்குச் சென்று பணியாற்ற வேண்டும்.
தலைமை அதிகாரிகள் (Executives) கடந்த மே 4 ஆம் தேதி முதல் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் சென்று வருகின்றனர்.
முன்னதாக, 2024 செப்டம்பர் முதல் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
ஊழியர்களிடையே சிறந்த பணிச்சூழலையும், கூட்டுழைப்பையும் உருவாக்கவே இந்த நடவடிக்கை என Treasury Board of Canada Secretariat தெரிவித்துள்ளது.
இருப்பினும், அலுவலக இடப்பற்றாக்குறை காரணமாக Global Affairs Canada, Statistics Canada, Immigration, Refugee and Citizenship Canada ஆகிய மூன்று துறைகள் இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்துவதில் தாமதத்தை அறிவித்துள்ளன.
ஊழியர்களின் வருகையை முன்னிட்டு, ஒட்டாவாவில் OC Transpo போக்குவரத்து சேவை 10 முக்கிய பேருந்து வழித்தடங்களில் சேவைகளை அதிகரித்துள்ளது.
அரசின் இந்த திடீர் முடிவுக்கு CAPE, PSAC, PIPSC போன்ற அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இக்கொள்கை குறித்து பிரதமர் Mark Carney விளக்கம் அளிக்க வேண்டும் என CAPE தலைவர் Nathan Prier கோரியுள்ளார். அத்துடன் PIPSC அமைப்பின் தலைவர் Sean O’Reilly, தங்களின் சட்டப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.










