கடமையின் போது கொல்லப்பட்ட றொரண்டோ பொலிஸ் அதிகாரிக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி!

றொரண்டோ (Toronto) அவசரப் பணிப் பிரிவின் (ETF) 43 வயதுடைய மூத்த பொலிஸ் அதிகாரி மார்க் பினிசோட்டோ (Marc Pinizzotto), கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதனையடுத்து, அவரது இறுதிச் சடங்கு எட்டோபிகோக் (Etobicoke) நகரில் உள்ள றொரண்டோ காங்கிரஸ் மையத்தில் (Toronto Congress Centre) நேற்று நடைபெற்றது.

கடந்த ஜூன் 11 அன்று நோர்த் யார்க் (North York) பகுதியில் சோதனை வாரண்ட் ஒன்றைச் செயல்படுத்தியபோது மார்க் பினிசோட்டோ சுடப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ETF பிரிவின் 64 ஆண்டுகால வரலாற்றில் அதிகாரி ஒருவர் கடமையின் போது கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இவரைக் கொலை செய்த 19 வயதுடைய நிக்கோலஸ் பென்னட் (Nicholas Bennett) என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த இறுதிச் சடங்கில் ஒன்ராறியோ பிரீமியர் டக் போர்ட் (Doug Ford), றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இச்சடங்கில் பேசிய அவரது 14 வயது இரட்டை குழந்தைகள் டேனியலா (Daniella) மற்றும் டொமினிக் (Domenic), “யாரும் கேட்கக்கூடிய சிறந்த அப்பா அவர்” என கண்ணீருடன் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

 

Video thumbnail
21 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்!
00:55
Video thumbnail
கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!
01:02
Video thumbnail
கனடாவில் பொய்யான கர்ப்பம் மூலம் பிரசவ உதவியாளர்களை ஏமாற்றிய சமூக சேவகி
01:04
Video thumbnail
மொன்றியலில் இணையவழி கூட்டத்தின் போது நடந்த கொடூரச் சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை
00:51
Video thumbnail
கனடா தன்னைத்தானே அழித்துக் கொள்கிறதாம்: டிரம்ப் விமர்சனம் - கனேடிய அமைச்சர்கள் மறுப்பு
01:10
Video thumbnail
பி.சி மாகாணத் தேர்தல் அறிவிப்பு : அக்டோபர் 24-இல் வாக்களிப்பு!
01:13
Video thumbnail
கனடாவில் அதிகரிக்கும் 'சாம்பல் விவாகரத்து' (Grey Divorce): 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவது ஏன்?
01:25
Video thumbnail
ஸ்கார்பாரோ வீதி மறுசீரமைப்பு: 'ஆபத்தான' வாகனம் ஓட்டுவதாக மக்கள் கவலை!
01:29
Video thumbnail
பிரின்சஸ் மார்கரெட் புற்றுநோய் அறக்கட்டள: $100 மில்லியன் வரலாற்றுச் சாதனை நன்கொடை!
01:06
Video thumbnail
றொராண்டோவில் இலையுதிர்காலம் தொடக்கம்: இந்த முறை மிதமான காலநிலை நிலவும் என கணிப்பு!
01:03

Related Articles

Latest Articles