கடத்தல்காரனிடமிருந்து விலங்குடன் தப்பியோடிய இளம் பெண் – நெஞ்சை பதறவைக்கும் காட்சி!

அமெரிக்காவின் தென் கரொலினா (South Carolina) மாகாணத்தில், கடத்தல்காரன் ஒருவனிடமிருந்து கைகளில் விலங்குடன் (Handcuffs) இளம் பெண் ஒருவர் தப்பியோடிய பரபரப்பான காட்சி வாகனப் பதிவுக்கருவியில் (Dashcam) சிக்கியுள்ளது.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மறுநாளே இப்பெண் இந்த அதிர்ச்சி சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

பெற்றோர் வீட்டிற்கு இடையே நடந்து சென்றுகொண்டிருந்த அவரை, பொலிஸ் அதிகாரி போல நடித்து ஏமாற்றிய 39 வயதுடைய ஜொனாதன் வில்லார்ட் (Jonathan Willard) என்பவர், வலுக்கட்டாயமாகத் தனது காரில் கடத்தியுள்ளார்.

அங்கிருந்து சாதுரியமாகத் தப்பிய அந்தப் பெண், வீதியில் கைகளில் விலங்குடன் ஓடிவந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக லொறியை ஓட்டிவந்த அன்தனி மூர் (Anthony Moore) என்பவரிடம் உதவி கோரினார்.

அவரைத் தொடர்ந்து துரத்தி வந்த கடத்தல்காரன், தானும் ஒரு பொலிஸ் அதிகாரி என லொறி ஓட்டுநரிடம் பொய் கூறியுள்ளார்.

ஆயினும், அவனது உடைந்த கார் மற்றும் நடத்தையில் சந்தேகமடைந்த ஓட்டுநரும், அங்கு வந்த மற்றொரு வாகனச் சாரதியும் உடனடியாக 911 என்ற அவசர இலக்கத்திற்குப் பொலிஸாரை அழைத்துள்ளனர்.

இதையடுத்து கடத்தல்காரன் அங்கிருந்து தப்பியோடினான்.

தற்போது, பொலிஸாரைப்போல் நடித்துக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஜொனாதன் வில்லார்ட் (Jonathan Willard) என்பவரை ஐகென் கவுண்டி (Aiken County) பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சமயோசிதமாகச் செயல்பட்டு பெண்ணைக் காப்பாற்றிய லொறி சாரதிக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles