சுமார் ஒரு வருட காலமாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையைத் தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டில் டொராண்டோவை (Toronto) சேர்ந்த 50 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
டொராண்டோவைச் சேர்ந்த 50 வயதான ஜோசப் மைக்கேல் மோர்டில்லாரோ (Joseph Michael Mortillaro) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 2025 இல் நயாகரா இணைய குழந்தைகள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் (Niagara ICE Unit) ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை, பின்னர் பீல் பிராந்திய பொலிசாருடன் (Peel Regional Police) இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
இணைய வழியாக குழந்தைகளை பாலியல் ரீதியாக அணுக முயன்றது மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவர் இணையதளங்களில் “DadOfTwo” மற்றும் “Mike” ஆகிய பெயர்களைப் பயன்படுத்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருந்தால், உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.










