ஒப்பந்தத்திற்காக கனடா துடிக்கிறது – ட்ரம்ப்; Energy திட்டங்களில் Carney அரசு அதிரடி மாற்றம்!

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு கனடா மிகவும் ஆவலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Dallas-ல் நடைபெற்ற Republican Midterm Convention-ல் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

மேலும் Lake Ontario-வை “Lake America” என்று அழைக்கும் தனது சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், கனேடிய பிரதமர் Mark Carney தலைமையிலான கனடா அரசு, நாட்டின் பெரிய Energy மற்றும் Infrastructure திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளை வேகப்படுத்த முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

Pipelines, மாகாணங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச மின் இணைப்புகள் உள்ளிட்ட சில திட்டங்கள், இனி கனடா எரிசக்தி ஒழுங்குமுறை மூலம் மதிப்பாய்வு செய்யப்படும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் கனடாவிற்கு ஒரு trillion dollars அளவிலான புதிய முதலீடுகளை ஈர்ப்பதே Carney அரசின் இலக்காக உள்ளது.

இதற்கிடையில் Edmonton-ல் பேசிய நிதியமைச்சர் François-Philippe Champagne, உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் கனடாவுக்கு புதிய வர்த்தக மற்றும் Energy கூட்டாண்மைகளை உருவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பதிலளிப்பதைவிட, “கனடாவுக்கு சரியானதை செய்வோம்” என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles