ஒன்றாரியோவில் புளிப்புச் செர்ரிப் பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு – விலை அதிகரிக்கும் சாத்தியம்!

ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக, பேக்கிங் மற்றும் பதப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்படும் புளிப்புச் செர்ரிப் (sour cherries / red tart cherries) பழங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மாகாணம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பயிர் இழப்பு காரணமாக, இம்முறை பல்பொருள் அங்காடிகளில் பேக்கிங் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் செர்ரிப் பழ வாளிகளை (pails of cherries) எதிர்பார்க்க முடியாது என ஒன்றாரியோ டெண்டர் புரூட் குரோவர்ஸ் (Ontario Tender Fruit Growers) அமைப்பு அறிவித்துள்ளது.

நயாகரா (Niagara) பிராந்தியத்தில் உள்ள, நூறு ஆண்டுகள் பழமையான செர்ரி லேன் (Cherry Lane) பண்ணையின் பொது முகாமையாளர் மிச்செல் ஸ்மித் (Michelle Smith) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  

வசந்த காலத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான காலநிலை, முன்கூட்டிய பனிப்பொழிவு மற்றும் போதிய மகரந்தச்சேர்க்கை இன்மை காரணமாக இம்முறை 40% முதல் 50% வரையான பயிர்களை மட்டுமே அறுவடை செய்ய முடிந்துள்ளதாகத்  அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், தங்களின் பிரதான தயாரிப்பான செர்ரி சாறு (juice concentrate) தயாரிப்புக்காக மீதமுள்ள பழங்கள் சேமிக்கப்படுவதாகவும், விநியோகக் குறைவு காரணமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, லேக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பீம்ஸ்வில் (Beamsville) பகுதியின் ரொமாக்னோலி பார்ம்ஸ் (Romagnoli Farms) உரிமையாளர் ஜாக் ரொமாக்னோலி (Jack Romagnoli), விசேட விதான அமைப்புகள் (canopy system) மூலம் தனது செர்ரி மரங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஒன்றாரியோ விவசாயக் கூட்டமைப்பின் (Ontario Federation of Agriculture – OFA) துணைத் தலைவர் சாரா வூட் (Sara Wood), இந்த 2026 ஆம் ஆண்டு சில விவசாயிகளுக்கு சாதகமாக இருந்தாலும், தென்மேற்கு ஒன்றாரியோவில் உள்ள பழ விவசாயிகள் சிலர் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், உள்ளூர் சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளுக்கு ஆதரவளிக்குமாறு அவர் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles