ஒண்டாரியோவின் (Ontario) மளிகைக் கடைகளில் தற்போது வழக்கமான பாலை விட இருமடங்கு அதிக கொழுப்புச் சத்துள்ள (6%) புதிய பால் அறிமுகமாகியுள்ளது.
சீல்டெஸ்ட் (Sealtest) நிறுவனம் தனது 6 சதவீத கொழுப்புச் சத்துள்ள பால் தயாரிப்பை கடந்த மாத இறுதியில் ஒண்டாரியோவில் அறிமுகப்படுத்தியது.
தெற்காசிய சமூகத்தினரின் (South Asian community) விருப்பத்திற்கேற்ப இது கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தகைய அதிக கொழுப்புள்ள பால், சுவையான தயிர் மற்றும் பன்னீர் (Paneer) தயாரிக்கவும், கோர்மா (Korma) போன்ற உணவுகளுக்கும் மிகவும் பொருத்தமானது.
கனடா சுகாதாரத் துறை (Health Canada) 24 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முழுமையான கொழுப்புள்ள பாலைப் பரிந்துரைத்தாலும், மற்றவர்களுக்குக் குறைந்த கொழுப்புள்ள பாலையே பரிந்துரைக்கிறது.
அதிக கொழுப்புள்ள பாலைக் குடிப்பதன் மூலம் இதய நோய்க்கு வழிவகுக்கும் ‘சாச்சுரேட்டட் பெட்’ (Saturated fat) உடலில் அதிகரிக்கும் என்று டயட்டீஷியன் அனிகா தல்லா (Anika Dhalla) எச்சரிக்கிறார்.
பசுவின் மடியில் இருந்து பால் கறக்கும்போது அதில் 4% கொழுப்பு மட்டுமே இருக்கும்.
இயந்திரங்கள் மூலம் பாலில் இருந்து கிரீமைப் பிரித்து, மீண்டும் தேவையான அளவில் சேர்ப்பதன் மூலமே இந்த 6% பால் தயாரிக்கப்படுகிறது.
புரதச் சத்து (Protein) மற்றும் கொழுப்புச் சத்து ஆகியவற்றுக்கு இடையேயான தெரிவுகளில் நுகர்வோர் தங்களுக்கு எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.










