உறங்கிக் கொண்டிருந்தபோது முகத்தில் வௌவால் கடித்ததால் 11 வயது சிறுவன் பலி – கனடாவில் சோகம்!

கனடாவின் ஒன்டாரியோ (Ontario) பகுதியில், உறங்கிக் கொண்டிருந்தபோது முகத்தில் வௌவால் கடித்ததால் 11 வயது சிறுவன் ஒருவன் ரேபிஸ் (Rabies – வெறிநாய்க்கடி) நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சோகமான சம்பவம் மருத்துவ அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், இச்சிறுவன் தனது குடும்பத்தினருடன் ஒன்டாரியோவில் உள்ள விடுமுறை இல்லம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவனது மூக்கு மற்றும் வாய் பகுதியில் வௌவால் ஒன்று அமர்ந்துள்ளது.

உடலில் காயங்கள் எதுவும் தெரியாததாலும், வௌவாலின் நடத்தையில் மாற்றம் இல்லாததாலும் அவனது பெற்றோர் உடனடியாக மருத்துவ உதவியை நாடவில்லை.

ஆனால், 19 நாட்களுக்குப் பிறகு சிறுவனின் முகத்தில் வீக்கமும் உணர்ச்சியற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு, ஆரம்பத்தில் சாதாரண நரம்புப் பாதிப்பு என தவறாகக் கருதப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காய்ச்சல், விழுங்குவதில் சிரமம் மற்றும் மாயத்தோற்றங்கள் போன்ற தீவிர அறிகுறிகள் தோன்றியதை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில், அவனுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனடிய மருத்துவ சங்க இதழ் (Canadian Medical Association Journal) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் 1924 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொற்றால் உயிரிழந்த 28 ஆவது நபர் இவராவார்.

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles