உடற்பயிற்சி வகுப்பில் மாணவனை “குண்டான சிறுவன்” என அழைத்த பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) ஆசிரியருக்கு கண்டனம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோயர் மெயின்லேண்ட் (B.C.’s Lower Mainland) பகுதியைச் சேர்ந்த மாற்று ஆசிரியர் (Substitute Teacher) ஒருவர், உடற்பயிற்சி வகுப்பின் போது மாணவர் ஒருவரை “குண்டான சிறுவன்” (fat kid) என்று அழைத்து தொழில்சார் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டதற்காக கண்டிக்கப்பட்டுள்ளார்.

கெரி வில்லியம் ஜென்கின்ஸ் (Gary William Jenkins) என்ற இந்த ஆசிரியரே இந்த கண்டத்தை எதிர்க்கொண்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் பர்னபி பள்ளி மாவட்டத்தில் (Burnaby school district) தரம் 6 மற்றும் 7 ஆம் ஆண்டுக்கான வகுப்பில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, மெதுவாக ஓடிய ஒரு மாணவனை நோக்கி “வா குண்டான சிறுவனே, தொடர்ந்து ஓடு” என்று கூறியுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், வேறொரு மாணவனின் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Chips) பாக்கெட்டை எடுத்து, அதில் உள்ள பொருட்களை சத்தமாக வாசித்து, இது போன்ற உணவுகள் மனிதர்களை குண்டாக்கும் என்றும் கூறியுள்ளார்.

மாணவர்களை அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்க அவர் முயன்றதாக ஒழுங்குமுறை ஆணையர் கண்டறிந்துள்ளார்.

மேலும், வகுப்பறைக்கு உதவிய மாணவர் ஒருவரிடம் தவறான முறையில் உடல் ரீதியான தொடுதலை (Inappropriate touch) ஏற்படுத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னரும் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மாணவர்கள் மீது முறையற்ற முறையில் கை வைத்ததாக இவர் மீது முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

இந்த 2023 சம்பவங்களைத் தொடர்ந்து, பாடசாலை மாவட்டம் அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை கடிதம் வழங்கியதுடன், எல்லைகளை பேணுவது தொடர்பான படிப்புகளையும் முடிக்க உத்தரவிட்டது.

தற்போது, ஆசிரியர் ஒழுங்குமுறைக்கான பணிப்பாளர் இவருக்கு மேலதிக கண்டனத்தை வழங்கி, “நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குதல்” (Creating a Positive Learning Environment) என்ற பாடநெறியை பூர்த்தி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles