கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் (Australia) உயிரிழந்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் Piper James-இன் நினைவேந்தல் நிகழ்வு, சனிக்கிழமை அன்று அவரது சொந்த ஊரான Campbell River-இல் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.
கடந்த ஜனவரி 19 அன்று ஆஸ்திரேலியாவின் K’gari தீவில் அதிகாலை நீச்சலுக்குச் சென்ற Piper James உயிரிழந்தார்.
அவரது உடல் அங்குள்ள SS Maheno கப்பல் சிதைவுப் பகுதிக்கு அருகே ‘டிங்கோ’ (Dingo) வகை காட்டு நாய்களால் சூழப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது உடலில் காட்டு நாய்கள் கடித்த அடையாளங்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Campbell River Baptist Church-இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவரின் பெற்றோர், Piper James “தைரியமானவள், உலகை ரசிப்பவள், சாகசங்களை விரும்புபள்” என்று கூறியதுடன் கவலை தெரிவித்தனர்.
Piper-உடன் ஆஸ்திரேலியா சென்றிருந்த அவரது தோழி Taylor Stricker, “எப்படி அச்சமின்றி வாழ வேண்டும் என்பதை அவளே எனக்குக் கற்றுக்கொடுத்தாள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
