ஆன்டெனாவில் ஏறி திருமண நிச்சயதார்த்தம் செய்த ஜோடி கைது!

உலகப் புகழ்பெற்ற Empire State Building கட்டிடத்தின் ஆன்டெனாவில் அனுமதியின்றி ஏறி, காதலை வெளிப்படுத்திய ரஷ்ய தம்பதியினர் Angela Nikolau மற்றும் Ivan Beerkus கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் 1,454 அடி உயரத்தில் “When the power of love beats the love of power, the world knows peace” என்ற வாசகத்துடன் பதாகையை விரித்தனர். பின்னர் ஆன்டெனாவில் முழங்காலிட்டு திருமண நிச்சயதார்த்தம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து  பொலிஸார் அவர்களை பாதுகாப்பாக கீழிறக்கி கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், உயரமான கட்டிடங்களில் அனுமதியின்றி ஏறும் சாகசங்களை மையமாகக் கொண்ட Netflix ஆவணப்படமான “Skywalkers: A Love Story” மூலம் பிரபலமானவர்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக burglary, reckless endangerment உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், அவர்கள் ஆன்டெனாவிற்குள் எவ்வாறு நுழைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles