அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தனது ‘State of the Union’ உரையை நிகழ்த்தினார்.
வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலை மையமாக வைத்து, அவரது சாதனைகளைக் கொண்டாடும் வகையில் இந்த உரை அமைந்திருந்தது.
அமெரிக்க ஒலிம்பிக் ஹாக்கி அணியின் வெற்றியைப் பாராட்டியும், நாட்டின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத் திட்டங்களை அறிவித்தும் தனது உரையை உற்சாகமாகத் தொடங்கினார்.
அதனையடுத்து ஜனநாயகக் கட்சியினரையும் (Democrats), சட்டவிரோதமாக குடியேறியவர்களையும் அதிபர் ட்ரம்ப் கடுமையாகச் சாடினார்.
“அமெரிக்க அரசாங்கத்தின் முதல் கடமை அமெரிக்க குடிமக்களைப் பாதுகாப்பதே” எனவும் அவர் வலியுறுத்தினார்.
பொருளாதார ரீதியாக நாடு முன்னேறி வருவதாக ட்ரம்ப் இதன் போது குறிப்பிட்டார்.
அதனையடுத்து இந்த ட்ரம்ப்பின் உரைக்குப் பதிலளித்த வர்ஜீனியா (Virginia) ஆளுநர் அபிகாயில் ஸ்பான்பெர்கர் (Abigail Spanberger), அதிபர் மக்களைப் பிரிக்கவும், ஆத்திரமூட்டவும் முயல்வதாகக் குற்றம் சாட்டியமை குறிப்பிடத்தக்கது.










