அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், Conservative தலைவர் Pierre Poilievre, பிரதமர் Mark Carney-க்கு “இனி அமெரிக்க கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம்” என கடிதம் எழுதியுள்ளார்.
Digital சேவைகள் வரியை கைவிட்டது, அமெரிக்கப் பொருட்கள் மீதான கனடாவின் எதிர்-வரிகளை நீக்கியது உள்ளிட்ட பல விடயங்களில் Ottawa ஏற்கனவே பின்னடைந்துள்ளதாக Poilievre குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய ஒப்பந்தத்தில் கனடிய மென்மரக் கட்டைகளுக்கு வரிவிலக்கு, steel மற்றும் aluminum மீதான துறைசார் வரி முடிவு, கட்டணம் இல்லாத வாகன வர்த்தகம் மற்றும் Buy America விதிகளில் கனடாவுக்கு முழு விலக்கு வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கா கனடியப் பொருட்கள் பலவற்றுக்கு ஆகஸ்ட் 19 முதல் 50 சதவீத புதிய வரிகளை விதிக்க எச்சரித்துள்ளது.
வரி விலக்கு பெறுவதற்காக, அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குவது, U.S. autos மீதான பதில்-வரிகளை நீக்குவது மற்றும் பால்பொருள் துறையில் சில மாற்றங்களை பரிசீலிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் கனடிய பால்பண்ணையாளர்கள் மேலும் சலுகைகளை வழங்க வேண்டாம் என Carney அரசை எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க வரிகளைத் தவிர்க்க கனடா மேலும் விட்டுக்கொடுக்குமா? அல்லது Carney கடுமையான நிலைப்பாட்டை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










