Torontவில் கைவிடப்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

cp24

Toronto நகரின் Riverside பகுதியில் உள்ள Matilda வீதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கட்டடமொன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இரவு 9:30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ, மளமளவென பரவியதால், உடனடியாக மூன்றாவது அலாரம் (third-alarm) எச்சரிக்கை விடுக்கப்பட்டு தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

தீயணைப்புத் துறை தலைவர் Jim Jessop அவர்களின் கூற்றுப்படி, கட்டடத்தின் கூரை மற்றும் சுவர்கள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த DVP நெடுஞ்சாலை மற்றும் அருகில் உள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடம் பல ஆண்டுகளாக மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

எனினும், கட்டடத்திற்குள் முழுமையான சோதனை இன்னும் நடத்தப்படவில்லை.

இந்த விபத்துக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleகல்கரியில் தொண்டு நடைப்பயணம்: உணவுப் பற்றாக்குறையைப் போக்க $300,000க்கும் அதிகமான நிதி திரட்டல்!
Next article12ஆம் வகுப்பு மாணவன் என அறிமுகப்படுத்திக் கொண்டு மாணவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!