Toronto நகரமே இந்த வார இறுதியில் கரீபியன் தீவுகளின் வண்ணங்களாலும் இசையாலும் களைகட்டியது!
59வது Toronto Caribbean Carnival Grand Parade, ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் வண்ணமயமான ஆடை அலங்காரங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.
Lakeshore Boulevard முழுவதும், Caribbean கலாசாரத்தை பிரதிபலிக்கும் பிரமாண்டமான costumes அணிந்த masqueraders, இசை மற்றும் நடனத்துடன் அணிவகுத்துச் சென்றனர்.
Soca, Calypso உள்ளிட்ட Caribbean இசையின் தாளத்திற்கு நடனமாடிய கலைஞர்களும், பிரமாண்டமான Mas bands-உம் இந்த அணிவகுப்பின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தன.
கண்ணைக் கவரும் இறகுகள், வண்ணமயமான ஆடைகள், பிரமாண்டமான அலங்காரங்கள் என Grand Parade முழுவதுமே ஒரு பெரிய வண்ணக் கொண்டாட்டமாக காட்சியளித்தது.
1967ஆம் ஆண்டு தொடங்கிய Toronto Caribbean Carnival, இன்று வட அமெரிக்காவின் மிகப்பெரிய Caribbean கொண்டாட்டங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
இந்த ஆண்டு Grand Parade, ஆகஸ்ட் 1ஆம் தேதி, Exhibition Place மற்றும் Lakeshore Boulevard பகுதிகளில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் தொடங்கிய நிகழ்வுகள் மாலை வரை தொடர்ந்தன.
இது வெறும் ஒரு அணிவகுப்பு மட்டுமல்ல… Caribbean மக்களின் கலாசாரம், இசை, பாரம்பரியம், பெருமை மற்றும் ஒற்றுமையை Toronto நகரில் கொண்டாடும் ஒரு மாபெரும் விழா!
