Strait of Hormuz மோதல் – Toronto உணவுக் களஞ்சியத்திற்கு வரவிருந்த $90,000 மதிப்பிலான உணவுப் பொருட்கள் சேதம்!

மத்திய கிழக்கில் உள்ள Strait of Hormuz கடற்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், கனடாவின் Daily Bread Food Bank நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் $90,000 டாலர் மதிப்பிலான உணவுப் பொருட்கள் கொண்டு வந்த கப்பல் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அருகேயுள்ள அந்த முக்கியமான கடல் வழித்தடத்தில் புதன்கிழமை அன்று மூன்று சரக்குக் கப்பல்கள் தாக்கப்பட்டன.

இதில் ஒரு கப்பலில் Toronto மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட அரிசி அடங்கிய சுமார் ஆறு கொள்கலன்கள் (Containers) இருந்ததாக Daily Bread Food Bank தலைமை அதிகாரி Neil Hetherington தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணவுத் தேவையில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடற்பயணிகளின் பாதுகாப்பு குறித்துக் கவலை வெளியிட்டுள்ள அவர், காப்பீடு (Insurance) மூலம் நிதி இழப்பைச் சமாளிக்க முடியும் என்றாலும், உணவிற்காகக் காத்திருக்கும் மக்களுக்கு தடையின்றி உணவு வழங்க மாற்றுத் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஈரான் போர் சூழலால் இந்தக் கடல் பகுதியில் இதுவரை 12க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Image – CTV News

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles