அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
Makeup பொருட்கள், Smartphones, Fridge, Washing Machine உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கப் பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை புதிய வரிகளை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
இந்தப் புதிய பதில் வரிகள் செப்டம்பர் 8ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 28 பில்லியன் கனடிய டொலர் மதிப்புள்ள பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரை புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட lip makeup, eye makeup, perfume மற்றும் சில hair-care பொருட்களுக்கு கனடா 50 சதவீத வரி விதிக்கிறது.
அதேபோன்று, குறிப்பிட்ட வகை Smartphones-க்கும் 50 சதவீத counter-tariff பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் கனடாவில் விற்கப்படும் எல்லா Smartphones-க்கும் இந்த வரி பொருந்தாது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், குறிப்பிட்ட வகைக்குள் வரும் பொருட்களுக்கே இது பொருந்தும்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் Refrigerators, Freezers, Washing Machines மற்றும் Dryers போன்ற பல இலத்திரனியல் உபகரணங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
இந்த வர்த்தக மோதலால் பாதிக்கப்படும் கனடிய தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான புதிய உதவித் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரிகளுக்கு அதே அளவில் பதில் கொடுப்போம் என்ற கனடாவின் முடிவால், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
