Scratch Ticket-ல் $1 Million! – Markham பாட்டியை ஒரே நொடியில் Millionaire ஆக்கிய அதிர்ஷ்டம்!

Markham-ஐ சேர்ந்த Thavamanidevy Jeyabalasingam என்ற பாட்டிக்கு, ஒரு Scratch ticket வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளது.

ULTRA Scratch ticket மூலம் அவர் ஒரு மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளார். 

Gas station-க்கு வெளியே bench ஒன்றில் அமர்ந்து ticket-ஐ பார்த்தபோதுதான் தனது வெற்றியை அவர் அறிந்துள்ளார். ஆரம்பத்தில் அதிலிருந்த பூஜ்ஜியங்களின் எண்ணிக்கையையே புரிந்துகொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு பேரப்பிள்ளைகளுக்கும் பாட்டியான அவர், வென்ற பணத்தின் மூலம் தனது குடும்பத்தினருக்கு உதவுவதுடன், குடும்பத்துடன் Jamaica மற்றும் Mexico பயணம் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

அதிர்ஷ்டமான ticket, Markham-இல் Ninth Line-ல் உள்ள Petro-Canada நிலையத்தில் வாங்கப்பட்டது.

Related Articles

Latest Articles