Scarborough-வில் களைகட்டிய Ribfest!

Toronto-வின் Scarborough வில் உணவு, இசை மற்றும் குடும்ப பொழுதுபோக்குடன் Scarborough Ribfest 2026 கோலாகலமாக நடைபெற்றது!

இந்த ஆண்டு Ribfest-க்கு இன்னொரு சிறப்பும் உண்டு… 25வது ஆண்டு விழாவாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது!

Thomson Park-ல் நடைபெற்ற இந்த நான்கு நாள் விழாவில், கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த சிறந்த Ribbers தங்களது சுவையான BBQ Ribs மற்றும் சிறப்பு Sauce வகைகளுடன் போட்டியிட்டனர்.

Best Ribs, Best Sauce, Best Chicken உள்ளிட்ட பல விருதுகளுக்காக Ribbers இடையே போட்டிகளும் நடைபெற்றன.

சுவையான உணவுடன் மட்டும் விழா நின்றுவிடவில்லை…

நேரடி இசை நிகழ்ச்சிகள், DJ இசை, குடும்பத்தினருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் Midway Rides என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை நடைபெறும் இந்த விழா, August long weekend-ஐ குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைகிறது. 

ஆனால் Scarborough Ribfest என்பது வெறும் உணவு மற்றும் பொழுதுபோக்கு விழா மட்டுமல்ல…

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் Rotary Club of Scarborough, Ribfest மூலம் திரட்டப்படும் நிதியை உள்ளூர் சமூகத்திற்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், தேவையுள்ள மக்களுக்கும் உதவ பயன்படுத்துகிறது.

கல்வி, குடும்ப நலன், சமூக நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால், சுவையான Ribs-ஐ ருசித்து, இசையையும் பொழுதுபோக்கையும் அனுபவிப்பதுடன், சமூக நலத்திற்கும் பங்களிக்கும் ஒரு நிகழ்வாக Scarborough Ribfest மாறியுள்ளது.

உணவு… இசை… குடும்ப பொழுதுபோக்கு… அதைவிட முக்கியமாக சமூகத்திற்கான பங்களிப்பு! இதுதான் 2026 Scarborough Ribfest-ன் சிறப்பு!

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles