Toronto-வின் Salsa on St. Clair Festival-ல் இரண்டு பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 18 வயதான Jessiah Massaro-Gill, செவ்வாய்க்கிழமை video link மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
July 11-ஆம் தேதி St. Clair Avenue West மற்றும் Arlington Avenue பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், இருவர் உயிரிழந்ததோடு, ஐவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் Massaro-Gill மீது இரண்டு முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஐந்து கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், மேலும் துப்பாக்கி போதைப்பொருள் வைத்திருத்தல் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதே வழக்கில் Lewis Downey என்ற மற்றொரு 18 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 13,000 பேர் festival பகுதியில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.










