Toronto-வைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் Rolan Sokolovski, முன்னாள் Canadian Olympic snowboarder Ryan Wedding-ன் குற்ற வலையமைப்புக்காக பெருமளவு பணத்தை சுத்திகரித்ததாகக் கூறப்படும் வழக்கில், அமெரிக்காவுக்கு ஒப்படைக்கப்படுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
37 வயதான Sokolovski, தனது Toronto நகைக்கடை மூலம் Wedding-ன் அமைப்புக்காக பணம் மற்றும் சொத்துகளை laundering செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவர் Wedding-க்காக பல luxury பொருட்களை வாங்கியதாகவும், அவற்றில் சுமார் $13 million மதிப்புள்ள Mercedes-Benz வாகனமும் அடங்குவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களின்படி, Sokolovski சோகோலோவ்ஸ்கி மீது கோகோயின் விநியோக சதி, கோகோயின் ஏற்றுமதி சதி, பணச்சலவை சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.
Toronto நீதிமன்றத்தில் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது வழக்கறிஞர், அர் அமெரிக்காவுக்கு செல்ல ஒப்புக்கொண்டது குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இல்லை என்றும், California நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.










