Ontario-வில் Social Assistance விதிகள் மாற்றம் — இனி Ontario Works, ODSP கிடையாது

Ontario-வில் Social Assistance தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றத்தை மாகாண அரசு அறிவித்துள்ளது.

Ontario Works மற்றும் Ontario Disability Support Program எனப்படும் ODSP உதவிகளை யார் பெறலாம் என்பது தொடர்பான immigration விதிகளை Ontario அரசு தற்போது மாற்றியுள்ளது.

புதிய விதிகளின்படி, கனடாவில் சட்டபூர்வ immigration status இல்லாமல் வசிப்பவர்கள் இனி இந்த social assistance உதவிகளைப் பெற முடியாது.

அத்துடன், கனடாவில் தற்காலிகமாக தங்குவதற்கு மட்டும் அனுமதி பெற்றுள்ள சிலரும் தகுதி பெறமாட்டார்கள்.

இதில் student visa, work permit, visitor status கொண்டவர்களை  உதாரணங்களாக Ontario அரசு குறிப்பிட்டுள்ளது.

சிறுவர், சமூகம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் மைக்கேல் பார்சா (Michael Parsa), மாகாணத்தின் சமூக உதவித் தொகைகள் கனடாவில் சட்டபூர்வமாக வாழ அனுமதிக்கப்பட்டு, நிதி சிரமத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கே சென்றடைவதை உறுதி செய்வதே இந்த மாற்றத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

எனவே Ontario Works அல்லது ODSP-க்கு விண்ணப்பிப்பவர்கள், இனிமேல் தங்களுடைய citizenship அல்லது immigration status தொடர்பான தகுதிகளையும் கவனமாக சரிபார்க்க வேண்டியிருக்கும்.

Related Articles

Latest Articles