Canada வின் Toronto நகரிலுள்ள North York பகுதியில், முதியவர்களிடம் கைப்பைகளை (Purses / Handbags) திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த September 1 முதல் October 6 வரையிலான காலப்பகுதியில், Weston Road மற்றும் Lawrence Avenue West பகுதி கடைகளில் கைப்பைகளை ஷாப்பிங் வண்டிகளில் வைத்துவிட்டு கவனம் மாறும் முதியவர்களைக் குறிவைத்து, இவர் திருட்டில் ஈடுபட்டு தப்பியோடியதாக Toronto Police தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் Toronto-வைச் சேர்ந்த Ashante Whittaker (29) என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 4 திருட்டு வழக்குகள், அனுமதி இன்றி கடன் அட்டை (Credit Card) பயன்படுத்தியமை மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தகவலறிந்த பொதுமக்கள் காவல்துறையை அல்லது Crime Stoppers அமைப்பைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
