Marineland காலியாகிறது! மேலும் 6 Beluga திமிங்கலங்கள் அமெரிக்காவுக்கு — இன்னும் 11 மட்டும் எஞ்சியுள்ளன

Niagara Falls-இல் உள்ள Marineland-இலிருந்து மேலும் ஆறு Beluga திமிங்கலங்கள் புதிய காப்பகங்களை நோக்கிப் பயணித்துள்ளன.

பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ள Marineland-இல் இருந்து, இரண்டு ஆண் மற்றும் நான்கு பெண் Beluga திமிங்கலங்கள் புதன்கிழமை சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வெளியேற்றப்பட்டன.

ஒவ்வொரு திமிங்கலமும் தனிப்பட்ட sling மூலம் தூக்கப்பட்டு, விசேட நீர்த் தொட்டிகளில் வைக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் Toronto Pearson விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து அவை விமானம் மூலம் Chicago-விலுள்ள Shedd Aquarium மற்றும் Atlanta-விலுள்ள Georgia Aquarium ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

Marineland 2024 முதல் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன், நிதிப் பிரச்சினைகள் காரணமாக அங்குள்ள கடல்வாழ் விலங்குகளை தொடர்ந்து பராமரிக்க முடியாது என தெரிவித்திருந்தது.

மீதமுள்ள திமிங்கலங்கள் மற்றும் dolphins-ஐயும் இந்த மாத இறுதிக்குள் புதிய இடங்களுக்கு மாற்ற Marineland திட்டமிட்டுள்ளது.

Related Articles

Latest Articles