Jeep, Ram, Chrysler, Dodge வாகனம் வைத்திருக்கிறீர்களா? இந்தச் செய்தி உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம்.
வாகன தயாரிப்பு நிறுவனமான Stellantis, rear-view camera-வின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய software பிரச்சினை காரணமாக உலகளவில் சுமார் 955,000 வாகனங்களை recall செய்வதாக அறிவித்துள்ளது.
வாகனத்தின் radio software-ல் ஏற்பட்டுள்ள கோளாறு, reverse gear-க்கு மாற்றும்போது rear-view camera படம் dashboard screen-ல் சரியாக தோன்றாமல் போகக்கூடிய நிலையை ஏற்படுத்தலாம்.
இதனால் வாகனத்தை பின்னோக்கி இயக்கும்போது சாரதிக்கு பின்னால் உள்ள நபர்கள் அல்லது பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டு, விபத்து அபாயம் அதிகரிக்கலாம்.
இந்த recall பெரும்பாலும் 2026 மற்றும் 2027 வருட model வாகனங்களை உள்ளடக்கியுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய வாகனங்களில்:
Chrysler Pacifica, Pacifica Plug-in Hybrid மற்றும் Voyager,
Dodge Charger,
Jeep Cherokee, Compass, Gladiator, Grand Cherokee, Grand Wagoneer மற்றும் Wrangler,
Ram 1500, Ram 2500 மற்றும் ProMaster ஆகியவை அடங்குகின்றன.
மொத்த recall-ல் சுமார் 848,000 வாகனங்கள் அமெரிக்காவில் உள்ளன.
மேலும் சுமார் 107,000 வாகனங்கள் கனடா, மெக்சிகோ மற்றும் ஏனைய சர்வதேச சந்தைகளில் உள்ளதாக Stellantis தெரிவித்துள்ளது.
ஆனால் வாகன உரிமையாளர்கள் அனைவரும் dealership-க்கு சென்று பெரிய அளவிலான repair செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இந்தப் பிரச்சினையை சரிசெய்ய software update வழங்கப்படவுள்ளது. Update தயாரானதும், வாகனத்தின் media screen-ல் அதனை install செய்யும்படி notification தோன்றும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த software பிரச்சினையுடன் தொடர்புடைய விபத்துகளோ காயங்களோ பதிவாகவில்லை என்றும் Stellantis தெரிவித்துள்ளது.
எனவே, 2026 அல்லது 2027 Jeep, Ram, Chrysler அல்லது Dodge வாகனம் வைத்திருப்பவர்கள், தங்களது வாகனம் இந்த recall-ல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியம்.










