GTA வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: எாிபொருள் விலை கணிசமாகக் குறைகிறது!

கிரேட்டர் டொரொன்டோ (GTA) பகுதி வாகன ஓட்டிகளுக்கு இந்த வார இறுதியில் எரிபொருள் விலையில் கூடுதல் நிவாரணம் கிடைக்கவுள்ளது.

புதன்கிழமை 11 சதம் குறைந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல் லீட்டருக்கு 9 சதம் குறைந்து 159.9 சதமாகவும், டீசல் லீட்டருக்கு 14 சதம் குறைந்து 234.9 சதமாகவும் குறையும் என ‘Canadians for Affordable Energy’ அமைப்பின் தலைவர் டான் மெக்டீக் (Dan McTeague) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளுக்கு சந்தை காட்டிய எதிர்வினையே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வார இறுதியில் அல்லது இந்த மாத பிற்பகுதியில் பெட்ரோல் விலை லீட்டருக்கு 1.50 டாலருக்கும் கீழே குறைய வாய்ப்புள்ளதாகவும், மிதமான வானிலை காரணமாக டீசல் தேவை குறைந்துள்ளதால் எரிபொருள் விலையேற்ற அழுத்தம் தற்காலிகமாக தணிந்துள்ளதாகவும் டான் மெக்டீக் (Dan McTeague) சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles