டொராண்டோ பகுதியில் உள்ள இரண்டு யூத வழிபாட்டுத் தலங்கள் (Synagogues) மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறித்து, டொராண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி Myron Demkiw இன்று முக்கிய விளக்கமளித்துள்ளார்.
டொராண்டோவின் Shaarei Shomayim மற்றும் தோர்ன்ஹில் (Thornhill) பகுதியில் உள்ள Beth Avraham Yoseph ஆகிய வழிபாட்டுத் தலங்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகின.
அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவங்களில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
டொராண்டோ மற்றும் யோர்க் (York) பிராந்திய புலனாய்வாளர்கள் இந்த இரு தாக்குதல்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் Mark Carney, இது யூத கனடியர்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வோகன் (Vaughan) மேயர் Steven Del Duca, வெறுப்புணர்வு மற்றும் யூத எதிர்ப்புக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிக பொலிசார் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
