GTA பகுதிக்கு இந்த கோடைகாலத்தில் குளுமையான மற்றும் மழை பொழிவுடனான காலநிலை!

கனடாவின் GTA (Greater Toronto Area) பகுதியில் இந்த ஆண்டு கோடைகாலம், வழக்கத்தை விட அதிக மழையுடனும், குளுமையாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

CityNewsஇன் தலைமை வானிலை ஆய்வாளர் (Chief Meteorologist) Natasha Ramsahai வெளியிட்டுள்ள மூன்று மாத காலத்திற்கான காலநிலை முன்னறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவாகும் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) விளைவு காரணமாக, கடல் நீர் வெப்பநிலை வழக்கத்தை விட 3 முதல் 4 பாகைகள் வரை அதிகரிக்கக்கூடும்.

இது உலகளாவிய வானிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.

இதனால் ஏற்படும் ‘போலார் ஜெட் ஸ்ட்ரீம்’ (polar jet stream) காற்றின் நகர்வு காரணமாக, Great Lakes மற்றும் Ontario பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் கடும் வெப்ப அலைகள் (heat waves) குறையும்.

எனினும், Torontoவில் சில நாட்கள் 30 பாகைக்கும் அதிகமான வெப்பம் நிலவக்கூடும்.

இதேவேளை, Ontario, Quebec மற்றும் Atlantic Canada ஆகிய பகுதிகளில் அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படும் வேளையில், B.C. மற்றும் Alberta ஆகிய பகுதிகளில் வறண்ட காலநிலையே நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது அங்கு காட்டுத்தீ (wildfire) அபாயத்தை அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles