GTAவில் முன்கூட்டியே தொடங்கிய சுவாச நோய் பருவகாலம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

cp24

GTA) வழக்கத்தை விடவும் இம்முறை சுவாச நோய் பருவகாலம் (Respiratory illness season) முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக H1N1 வகை இன்ஃப்ளூயன்ஸா (Influenza) வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர் Dr. Fahad Razak தெரிவித்துள்ளார்.

கனடாவில் (Canada) அக்டோபர் 26 முதல் 6 மாதங்களுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ள நிலையில், முன்கூட்டியே வைரஸ் பரவுவது குறித்து தொற்றுநோய் நிபுணர் Dr. Isaac Bogoch கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், கைகளைத் தூய்மையாகக் கழுவுதல், அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருத்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Previous articleபல்கலைக்கழக சேர்க்கை மற்றும் குடிவரவு மோசடி: $1 மில்லியன் திட்டத்தில் இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது!
Next articleஅரசாங்கத்தின் உதவித் தொகையால் எந்த மாற்றமும் இல்லை: கவலைப்படும் மக்கள்!