கனடா–ஐரோப்பிய ஒன்றிய உறவில் முக்கியமான புதிய முன்மொழிவு ஒன்று வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen, கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் “Associate Member” ஆக இணைப்பதற்கான வாயிலைத் திறக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.
Strasbourg-இல் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் State of the Union உரையில் இதனை அறிவித்தபோது, கனடா பிரதமர் Mark Carney-யும் அங்கிருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், Canada மற்றும் Europe ஆகியவை ஜனநாயகம், பாதுகாப்பு, Ukraine, Artificial Intelligence, காலநிலை மாற்றம், critical minerals, supply chains உள்ளிட்ட பல துறைகளில் ஒரே மாதிரியான நோக்கங்களைப் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் technology, advanced manufacturing, defence industries மற்றும் Arctic பகுதிகளில் Canada–EU ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடா தற்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராக சேரவில்லை. இந்த “Associate Member” என்ற புதிய அமைப்பு என்ன அதிகாரங்களைக் கொண்டிருக்கும், என்ன விதிமுறைகள் இருக்கும் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை. இறுதி முடிவை எடுப்பதில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் பங்கேற்க வேண்டும்.
இதற்கிடையில் பிரதமர் Mark Carney, கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு உறுப்பினராக இணைய முயற்சிக்கவில்லை; அதற்கு பதிலாக ஒரு “தனித்துவமான பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டணி” உருவாக்க விரும்புவதாக ஏற்கனவே கூறியுள்ளார்.
கனடா ஐரோப்பிய ஒன்றிய உறவின் அடுத்த முக்கிய கட்ட பேச்சுவார்த்தைகள் October 29–30 Montreal-ல் நடைபெறும் Canada–EU Summit-இல் தொடரவுள்ளன.
