Etobicoke கழிவு செயலாக்க நிலையத்தில் பாரிய தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிர நடவடிக்கை!

கனடாவின் Toronto நகரில் உள்ள Etobicoke பகுதியில் அமைந்துள்ள தனியார் கழிவு செயலாக்க நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

156 Disco Road இல் அமைந்துள்ள ‘YORK1 Disco Transfer Station’ கட்டிடத்தினுள் அதிகாலை 3:58 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் கட்டுமானப் பொருட்களும் இன்சுலேஷன் (insulation) பொருட்களும் தீப்பற்றி எரிந்ததாக Toronto Fire Services Commander John Carson தெரிவித்துள்ளார்.

கட்டிடத்தின் அமைப்பு பலவீனமடையும் அபாயம் ஏற்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் வெளியிலிருந்தே தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டு தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இந்த விபத்தினால் Hwy. 427 பகுதியில் அடர்ந்த புகை பரவியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், Disco Road மற்றும் Attwell Drive ஆகிய வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

கடந்த Oct. 23, 2025 அன்றும் இதே Disco Road பகுதியில் உள்ள கழிவு நிலையத்தில் 3-alarm தீ விபத்து ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles