கட்டுமானத் தொழிலாளர்கள் போல வேடமிட்டு, வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஒரு குழு தொடர்பான விசாரணையின் விபரங்களை Toronto Police வெளியிட்டுள்ளது.
Project Compass என பெயரிடப்பட்ட இந்த விசாரணை, Toronto மற்றும் York Region பகுதிகளில் இடம்பெற்ற 30-க்கும் மேற்பட்ட break-and-enter சம்பவங்களை விசாரித்துள்ளது.
கொள்ளையர்கள் பகல் நேரத்தில் கட்டுமான உடைகளை அணிந்து apartment மற்றும் condominium கட்டிடங்களுக்குள் சந்தேகம் ஏற்படாத வகையில் நுழைவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பின்னர் வீடுகளை உடைத்து, நகை, தங்கம், பணம், பாரம்பரியப் பொருட்கள் உள்ளிட்ட விலைமதிப்புள்ளவற்றை எடுத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மொத்த இழப்பு ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் Vaughan-ஐச் சேர்ந்த இருவர் மற்றும் Toronto-வைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என நம்பும் Toronto Police, சந்தேகத்திற்கிடமான சம்பவங்களை சந்தித்தவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.










