“Canada Citizenship வேண்டி குவியும் Americans!” — விண்ணப்பங்கள் 1.21 லட்சத்தைத் தாண்டின

Canadian citizenship பெற அமெரிக்கர்கள் மத்தியில் திடீரென ஆர்வம் அதிகரித்திருக்கிறதா?

கனடிய Citizenship Certificate-களுக்கான விண்ணப்பங்கள் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இந்த அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன் பின்னணியில் இருப்பது கடந்த டிசம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்த Bill C-3 எனப்படும் Canadian Citizenship Act மாற்றம்.

இதற்கு முன்னர், கனடாவுக்கு வெளியே பிறந்தவர்களுக்கு citizenship by descent வழங்குவதில் first-generation limit இருந்தது.

ஆனால் Bill C-3 அந்த வரம்பை சில சூழ்நிலைகளில் நீக்கியுள்ளது. குறிப்பாக டிசம்பர் 15, 2025க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தைய சில சந்ததியினரும், புதிய விதிகளின் கீழ் Canadian citizen ஆகக் கருதப்படலாம்.

அதாவது, குடும்பத்தில் கனடிய வம்சாவளித் தொடர்பு இருந்தும் பழைய சட்டத்தால் citizenship பெற முடியாமல் இருந்த பலருக்கு இப்போது புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த மாற்றத்திற்குப் பின்னர் வழங்கப்பட்ட Citizenship Certificate-களின் எண்ணிக்கை மார்ச் 31 முதல் மே 31 வரையான இரண்டு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

Bill C-3 கீழ் மே 31ஆம் திகதி வரை சுமார் 6,100 certificates வழங்கப்பட்டுள்ளன. அதில் 3,100-க்கும் அதிகமானவை அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏற்கனவே கனேடிய பெற்றோர் மூலம் citizenship பெற்ற மேலும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களும் certificates பெற்றுள்ளனர்.

ஆனால் இந்த பெரும் ஆர்வம் தற்போது IRCC-க்கு மிகப்பெரிய backlog-ஐ உருவாக்கியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சுமார் 56,000 applications processing-க்காக காத்திருந்த நிலையில், மே மாதத்தில் அது 70,400 ஆக உயர்ந்தது.

தற்போது அந்த எண்ணிக்கை 121,800 applications வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக Citizenship Certificate ஒன்றைப் பெறுவதற்கான estimated processing time, மே மாதத்தில் சுமார் 12 மாதங்களாக இருந்த நிலையில், தற்போது 25 மாதங்கள் – அதாவது இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இங்கே இன்னொரு முக்கிய விடயமும் உள்ளது.

Citizenship Certificate என்பது ஒருவருக்கு புதிதாக citizenship வழங்கும் ஆவணம் அல்ல.

புதிய சட்டத்தின் கீழ் ஏற்கனவே Canadian citizen ஆக இருக்கக்கூடிய ஒருவர், தனது citizenship-ஐ அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப் பெறும் ஆவணம்தான் இது. அந்த certificate-ஐ பயன்படுத்தியே பின்னர் Canadian passport-க்கு விண்ணப்பிக்க முடியும்.

அமெரிக்கர்களின் இந்த திடீர் ஆர்வம் காரணமாக பழைய birth, marriage மற்றும் வம்சாவளி பதிவுகளை வைத்திருக்கும் Canadian archives-களுக்கும் அதிகமான கோரிக்கைகள் வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Canadian citizenship-ஐ நிரூபிக்க உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்கர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய ஆர்வம், தற்போது கனடாவின் citizenship system-க்கே மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
Toronto-வில் புதிய சுகாதார எச்சரிக்கை!
01:38
Video thumbnail
விமானம் கண்டுபிடிக்கப்பட்டது... ஆனால் விமானி எங்கே?
01:19
Video thumbnail
CA-US 50% Trump Tariff-க்கு Countdown ஆரம்பம்!
01:47
Video thumbnail
🌧️🏠 வெள்ளம் வந்தால் வீட்டுக்கு மட்டும் பாதிப்பில்லை... உங்கள் Insurance bill-க்கும் பாதிப்பு!
01:23
Video thumbnail
🚲❌ Toronto Bike Lanes அகற்றப்படுகிறதா? Ford அரசுக்கு முக்கிய நீதிமன்ற வெற்றி!
01:29
Video thumbnail
💻❌ Laptop வேண்டாம்... ✍️ கையால் எழுதுங்கள்!AI காலத்தில் மீண்டும் பேனை, பேப்பரா? 🤔
01:49
Video thumbnail
Scarborough-வில் பரபரப்பு! 🔍 கண்டெடுக்கப்பட்டது உண்மையில் மனித உடல் எச்சங்களா?
00:44
Video thumbnail
⚠️ Burlington-ல் வௌவாலுக்கு Rabies உறுதி!
01:13
Video thumbnail
கனடாவில் இருந்து தாயகம் சென்ற தமிழருக்கு நேர்ந்த சோகம்...
01:14
Video thumbnail
தமிழர் தெருவிழா சொல்லும் கதை என்ன? அதன் பின்னணி என்ன?
33:43

Related Articles

Latest Articles