Canada மீது புதிய தடை! கனடிய மதுபானம், பால் பொருட்களுக்கு Trump தடை!

அமெரிக்க அதிபர் Donald Trump, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் motorcycles உள்ளிட்ட பொருட்களுக்கு நேரடி இறக்குமதி தடையை அறிவித்துள்ளார்.

இந்த புதிய தடை செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

அத்துடன், மேலும் சில கனடிய பொருட்களுக்கு 50 சதவீத அமெரிக்க வரிவிதிக்கப்படவுள்ளது.

Aluminum பொருட்கள், சில steel products, furniture, desks, lamps, golf carts மற்றும் mattresses உள்ளிட்ட பொருட்கள் இதில் அடங்குகின்றன. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இந்த நடவடிக்கை, கனடா அமெரிக்க பொருட்களுக்கு எதிர் வரிகளை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து வந்துள்ளது.

கனடாவின் புதிய எதிர் வரிகள் 15 முதல் 50 சதவீதம் வரை உள்ளன. அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு வரும் நூற்றுக்கணக்கான பொருட்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

இதுபற்றிய பேசிய கனேடிய வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, அமெரிக்காவின் புதிய நடவடிக்கைகளை கனடா ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகும்போது, கனடாவும் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்றும், ஆனால் கனடாவின் இறையாண்மையும் பொருளாதார நலன்களும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் Mark Carney அரசு, அமெரிக்க சந்தையை மட்டும் அதிகமாக சார்ந்திருப்பதை குறைத்து, உலகின் பிற நாடுகளுடன் கனடாவின் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.

Related Articles

Latest Articles