கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணம் Torontoவைச் சேர்ந்த மேரி வாசிலோ (Marie Vasilou) மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஓகஸ்ட் மாதம் பிரான்ஸ் (France) நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டனர். எனினும், இணைப்பு விமானத் தாமதம் காரணமாக அவர்களின் மூன்று பயணப் பெட்டிகள் காணாமல் போயின.
தங்கள் பெட்டிகளில் ஏார்டேக் (AirTag) வைத்திருந்ததால், அவை எங்கெங்கு செல்கின்றன என்பதை மேரி வாசிலோவால் (Marie Vasilou) நேரலையாகப் பார்க்க முடிந்தது.
அதில் ஒரு பெட்டி மொன்றியல் (YUL – Montreal) மற்றும் டொரொன்டோ (YYZ – Toronto) விமான நிலையங்களுக்கு இடையே மாறி மாறிச் சென்றதோடு, பாரிஸ் (Paris) விமான நிலையத்திலும் தங்களுக்கு மிக அருகிலேயே இருந்ததை அவரால் உறுதி செய்ய முடிந்தது.
ஆனால், ஏர் ஃபிரான்ஸ் (Air France) நிறுவன ஊழியர்களிடம் இந்தத் தகவலைக் கூறியபோது, தங்கள் சொந்த பார்கோட் (Barcode) நடைமுறைகளைப் மட்டுமே பின்பற்ற முடியும் எனக் கூறி, ஏார்டேக் (AirTag) தகவல்களைப் பயன்படுத்த அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து CTV News செய்தி நிறுவனம் ஏர் பிரான்ஸ் (Air France) நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, காணாமல் போன கடைசிப் பெட்டியும் மீட்கப்பட்டு மேரி வாசிலோவிடம் (Marie Vasilou) ஒப்படைக்கப்பட்டது.
பெட்டி திரும்பக் கிடைத்தாலும், இந்த அலைச்சலுக்கு உரிய இழப்பீடு கோரி அவர் விண்ணப்பித்துள்ளார்.
