அமெரிக்க உறவுகள் : கனடிய பிரதமருக்கும் கியூபெக் முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல்

cbc

கனடிய பிரதமர் மார்க் கார்னிக்கும் (Mark Carney), கியூபெக் (Quebec) முதல்வர் போல் செயிண்ட்-பியர் பிளமண்டனுக்கும் (Paul St-Pierre Plamondon) இடையிலான உறவில் மீண்டும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியுள்ளன.

அமெரிக்காவின் 59 புதிய மக்கள் பிரதிநிதிகளுக்கு கியூபெக் முதல்வர் கடிதங்கள் எழுதி, நேரடியாக வர்த்தக உறவுகளை ஏற்படுத்த அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மார்க் கார்னி, சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்றும், ஒரு பேச்சுவார்த்தையில் ஒரே ஒரு பிரதிநிதி இருப்பதுதான் நல்லது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கியூபெக் முதல்வர், “கார்னி எனது மேலதிகாரி (Boss) அல்ல” என்றும், கியூபெக்கின் சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்க மாகாணம் தொடர்ந்து நேரடியாகச் செயல்படும் என்றும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மொண்ட்ரியலில் (Montreal) நடைபெற்ற கனடா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உரையாற்ற வாய்ப்பளிக்கப்படவில்லை எனக் கூறி நிகழ்வைப் புறக்கணித்த கியூபெக் முதல்வர், தற்போது அமெரிக்காவுடனான நேரடி வர்த்தக உறவுகள் விஷயத்திலும் மத்திய அரசுடன் முரண்பட்டுள்ளார்.

Previous articleCalgaryயில் தீ எச்சரிக்கை விடுப்பு: வரண்ட வானிலையால் ஆபத்து அதிகரிப்பு