தொடர்ச்சியான வறண்ட வானிலை, வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக கனடாவின் கல்கரி (Calgary) நகரத்தில் செவ்வாய்க்கிழமை தீ எச்சரிக்கை (Fire advisory) விடுக்கப்பட்டுள்ளது.
உலர்ந்த புற்கள் மற்றும் காய்ந்த இலைகள் மூலமாக எளிதில் தீ பரவக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நகர அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கை புதிய தடைகள் எதையும் விதிக்காவிட்டாலும், நிலைமை சீராகும் வரை பொழுதுபோக்கு தீ மூட்டுதல்களைத் தள்ளிப்போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பியர்ஸ்பா சவுத் ஃபீடர் மெயின் (Bearspaw South Feeder Main) குழாய் திருத்த வேலைகள் நடந்து வருவதால், கல்கரி நகரம் 4ஆம் கட்ட வெளிப்புற நீர் பயன்பாட்டுத் தடையின் கீழ் இயங்கி வருகிறது.
தீயணைப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவையான நீர் இருப்பை உறுதிசெய்யவும், தேவையற்ற நீர் விரயத்தைத் தவிர்க்கவும் பொதுமக்கள் தீ பரவல் தொடர்பான கூடுதல் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
