வாழ்க்கைச் செலவு மணித்தியாலத்திற்கு $24 ஐத் தாண்டியது: இளவரசர் எட்வர்ட் தீவில் மக்கள் சிரமம்

ctvnews

கனடாவின் இளவரசர் எட்வர்ட் தீவு (P.E.I.) மாகாணத்தில் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க ஒருவருக்கு மணித்தியாலத்திற்கு சராசரியாக $24 தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் $17.30 ஆக மட்டுமே உள்ளதாகவும் கொள்கை விருப்பங்களுக்கான கனடிய மையத்தின் (CCPA) புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சார்லட்டவுன் (Charlottetown) பகுதியில் வெளியிடப்பட்ட மாகாணத்தின் புதிய மூலதனப் வரவுசெலவுத் திட்டத்தில், சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து 5 ஆண்டுகளுக்கு $1.34 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட $289 மில்லியன் குறைவாகும்.

வீட்டுவசதித் திட்டங்களுக்கு $60 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது போதுமானதாக இல்லை என CCPA அமைப்பின் இயக்குனர் கிறிஸ்டின் சோல்னியர் (Christine Saulnier) விமர்சித்துள்ளார்.

எனினும், நிலுவையிலுள்ள திட்டங்களை முடிப்பதற்கும், தேவையற்ற கடன்களைத் தவிர்ப்பதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சர் ஜில் பர்ரிட்ஜ் (Jill Burridge) மற்றும் முதன்மை அமைச்சர் ராப் லான்ட்ஸ் (Rob Lantz) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Previous articleஅத்தியாவசிய சேவைகளின்றி 72 மணிநேரம் சமாளிக்க கனடியர்கள் தயாராக இருக்க வேண்டும்: நிபுணர்கள் எச்சரிக்கை
Next articleCalgaryயில் தீ எச்சரிக்கை விடுப்பு: வரண்ட வானிலையால் ஆபத்து அதிகரிப்பு