Milton நகரில் கைவிடப்பட்ட கட்டிடத்தில் தீ விபத்து: உயிர்ச்சேதம் இல்லை!

cp24

கனடாவி Milton நகர் மையப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Milton GO Stationக்கு அருகில், மெயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Main Street East) மற்றும் வில்சன் டிரைவ் (Wilson Drive) சந்திப்பில் உள்ள 775 மெயின் ஸ்ட்ரீட் முகவரியில் அமைந்துள்ள கட்டிடத்திலேயே மாலை 6:30 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இக்கட்டிடமானது முன்பு ‘ஹபிடாட் ஃபார் ஹியூமானிட்டி ரீஸ்டோர்’ (Habitat for Humanity ReStore) இயங்கி வந்த இடமாகும்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பதை மில்டன் தீயணைப்பு படைத்தளபதி பீட்டர் கட்டோ (Peter Gatto) உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், அடர்ந்த புகை மூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடம் (Condo building) காலியாக்கப்பட்டது.
ஹால்டன் பிராந்திய பொலிஸார் (Halton Regional Police Service) அப்பகுதியில் போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவான்கூவரில் வெள்ளப்பெருக்கு : 22 வீடுகளுக்கு உடனடியாக வெளியேறுமாறு உத்தியோகபூர்வ உத்தரவு
Next articleஹாலோவீன் சாக்கலேட்டில் கஞ்சா: 4 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!