கனடாவில் அதிகரிக்கும் 5 மளிகைப் பொருட்களின் விலை!

cbc

கனடாவில் ஒட்டுமொத்த பணவீக்கத்தை விட மளிகைப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காலநிலை மாற்றம், வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடையால் மாட்டிறைச்சி, கோழிறைச்சி, தக்காளி மற்றும் கீரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை இந்த ஆண்டு கடுமையாக உயர்ந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வறட்சியான காலநிலை காரணமாக கால்நடைத் தீவனங்கள் விலை உயர்ந்ததாலும், கவ்காய் மற்றும் அமெரிக்க வர்த்தகக் கொள்கைகளாலும் விலைகள் உச்சத்தை எட்டியுள்ளன.

குறிப்பாக U.S. மற்றும் மெக்சிகோ (Mexico) நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் வர்த்தகத் தடைகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நிபுணர் Jim Stanford மற்றும் வேளாண் பேராசிரியர் Mike von Massow ஆகியோர், புரதச்சத்துக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்திச் சிக்கல்கள் உணவுப் பொருட்களின் விலையை மேலும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

விலைக் கட்டுப்பாடுகளைக் கண்காணிக்க Competition Bureau அமைப்பை வலுப்படுத்தவும், மளிகைப் பொருள் சந்தையில் போட்டியை அதிகரிக்கவும் பெடரல் அரசாங்கம் National Food Security Strategy திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Previous articleரொரன்ரோ தேர்தலில் வாக்காளர்கள் புதிய சாதனை! முன்கூட்டியே 2.22 இலட்சம் பேர் வாக்களிப்பு!
Next article1,711 பவுண்ட் எடையுள்ள பூசணிக்காய் – முதலிடத்தை இழந்த கனடிய விவசாயி!