கனடாவில் தொடர்ச்சியாக 2வது ஆண்டாகக் குறைந்த வாடகைக்கட்டணம் – புதிய அறிக்கை தகவல்!

cbc

Canada-வில் வாடகை வீடுகளுக்கான சராசரி மாதக் கட்டணம் கடந்த September மாதத்தில் $2,034 ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 4.2% வீழ்ச்சியாகும். Rentals.ca மற்றும் Urbanation வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த இரு ஆண்டுகளாகவே கனடாவில் வாடகை விலைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.

மாகாணங்கள் வாரியாக, Ontario-வில் 4.8%, B.C.-யில் 2.9%, Alberta-வில் 2.6% மற்றும் Quebec-இல் 1.7% என வாடகைகள் குறைந்துள்ளன.

Condo ரக வீடுகளின் வாடகை அதிகபட்சமாக 7.8% சரிவைக் கண்டுள்ளது. அதேநேரம், Nova Scotia மற்றும் Saskatchewan மாகாணங்களில் வாடகை 1.4% உயர்ந்துள்ளது.

Toronto மற்றும் Vancouver போன்ற முக்கிய நகரங்களில் புதிய வீடுகளின் வரத்து அதிகரித்ததே இந்நிலைமைக்கு முக்கியக் காரணம் என Urbanation தலைவர் Shaun Hildebrand தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த இரு நகரங்களிலும் சந்தை மீண்டும் சீரடைந்து வரும் அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகனடா மீதான வரிக்கொள்கை – டிரம்ப் உடன் முரண்படும் குடியரசுக் கட்சி வேட்பாளர் Mike Rogers!
Next articleOSAP நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தம்! மாணவர்களுக்கு மின்னஞ்சல்!