North Yorkக்கில் முதியவர்களிடம் கைப்பைகளை திருடும் பெண் பெண் கைது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

cp24

Canada வின் Toronto நகரிலுள்ள North York பகுதியில், முதியவர்களிடம் கைப்பைகளை (Purses / Handbags) திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த September 1 முதல் October 6 வரையிலான காலப்பகுதியில், Weston Road மற்றும் Lawrence Avenue West பகுதி கடைகளில் கைப்பைகளை ஷாப்பிங் வண்டிகளில் வைத்துவிட்டு கவனம் மாறும் முதியவர்களைக் குறிவைத்து, இவர் திருட்டில் ஈடுபட்டு தப்பியோடியதாக Toronto Police தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் Toronto-வைச் சேர்ந்த Ashante Whittaker (29) என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 4 திருட்டு வழக்குகள், அனுமதி இன்றி கடன் அட்டை (Credit Card) பயன்படுத்தியமை மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மேலும் சிலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தகவலறிந்த பொதுமக்கள் காவல்துறையை அல்லது Crime Stoppers அமைப்பைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous articleகனடிய கவிஞர் ஆனி கர்சனுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு
Next articleVaughan பகுதியில் விபத்தை ஏற்படுத்தித் தப்பிய ஓட்டுநர் – சரணடையுமாறு காவல்துறை எச்சரிக்கை!