ஒட்டாவா வாசிகள் தயாராக இருக்க வேண்டும்: தீவிர குடியேற்ற எதிர்ப்பு அமைப்பு எச்சரிக்கை!

cbc

கனடாவின்  தலைநகரான Ottawa வில் Dominion Society of Canada என்ற தீவிர குடியேற்ற எதிர்ப்பு அமைப்பு பரப்பி வரும் போஸ்டர்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் அங்குப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த அழைப்பு விடுக்கும் இந்த அமைப்பு, தங்கள் பிரச்சாரம் இதுவொரு தொடக்கம் மட்டுமே என்றும் ஒட்டாவா வாசிகள் தயாராக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.

எனினும், இதுவரை ஒட்டாவா பொலிஸாருக்குக் (Ottawa Police) கிடைத்த 18 புகார்களின் அடிப்படையில், இந்த போஸ்டர்கள் வெறுப்புக் குற்றங்களின் (Hate crimes) எல்லைக்குள் வரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

டேனியல் டைரி (Daniel Tyrie) என்பவரால் 2025-இல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, வெள்ளை இனத்தவரை மட்டுமே உண்மையான கனடியர்களாகக் கருதுவதாகவும், இதனை இன சுத்திகரிப்புக்கான தீவிர நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலரான Evan Balgord கவலை தெரிவித்துள்ளார்.

Previous articleஉறைபனியில் உறைந்து உயிரிழந்த இந்திய குடும்பம் – மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்!
Next articleகனடிய கவிஞர் ஆனி கர்சனுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு