கனடிய டொலரின் மதிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது: டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

winnipegsun

கனடாவிற்கும் (Canada) அமெரிக்காவிற்கும் (U.S.) இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடிய டொலரின் (Canadian Dollar) மதிப்பு தொடர்பான தனது அதிருப்தியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெளியிட்டுள்ளார்.

“அமெரிக்க டொலருக்கு எதிரான கனடிய டொலரின் சமநிலையின்மை ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது பல வருடங்களாகத் தொடர்கிறது, ஆனால் இனி அது நீடிக்காது” என ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க பொருட்களுக்கு எதிராக கனடா புதிய பழிவாங்கும் வரிகளை (Retaliatory Tariffs) விதிக்கத் தயாராகி வரும் நிலையில் ட்ரம்பின் (Donald Trump) இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Lake Ontario  வை Lake America எனப் பெயர் மாற்றம் செய்யும் ட்ரம்பின் உத்தரவை Google Maps, Apple Maps மற்றும் (Bing) போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற நாடுகள் அமெரிக்க உணவுப் பொருட்களைத் தடை செய்வதும், தங்களது நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதும் நியாயமற்ற வர்த்தக தந்திரங்கள் என ட்ரம்ப் கடுமையாகக் விமர்சித்துள்ளார்.

Previous articleLake Ontario ‘ பெயர் மாற்றம்: ட்ரம்பிற்குப் பதிலடியாக டக் போர்ட் வைத்த பிரம்மாண்டப் பலகை!
Next articleமில்டனில் வீதி விபத்து : Highway 401 இன் மேற்குநோக்கிச் செல்லும் பாதைகளுக்கு பூட்டு!