Lake Ontario பெயரை மாற்ற மறுத்த மேப்வெஸ்ட் நிறுவனம் – பயன்பாட்டாளர்கள் அதிகரிப்பு!

அமெரிக்க அதிபர் Donald Trump பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, கூகுள் Google மற்றும் ஆப்பிள் Apple போன்ற முன்னணி நிறுவனங்கள் லேக் ஒன்டாரியோவின் Lake Ontario பெயரை லேக் அமெரிக்கா Lake America என மாற்றின.

ஆனால், வரைபடச் சேவையை வழங்கும் மேப்வெஸ்ட் MapQuest நிறுவனம் அப்பெயரை மாற்ற மறுத்து Lake Ontario என்றே தொடர்வதாக அறிவித்தது.

டொராண்டோவிற்கு (Toronto) வருகை தந்த மேப்வெஸ்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் Doug Berger, பயனர்களுக்குத் துல்லியமான மற்றும் பரிச்சயமான பெயர்களை வழங்குவதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான இந்த உத்தரவைப் புறக்கணித்துத் துணிச்சலாகச் செயல்பட்ட மேப்வெஸ்ட் நிறுவனத்திற்குப் பயனர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக, அந்நிறுவனத்தின் செயலியை புதிதாக சுமார் 30 லட்சம் 3 Million பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

புதிய பயனர்களின் வருகையைத் தொடர்ந்து, தனது சேவைகளை மேலும் மேம்படுத்த மேப்வெஸ்ட் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Articles

Latest Articles